• Sep 19 2024

பணத்தால் வந்த தகராறு; மாமியாரை கல்லால் அடித்து கொன்ற மருமகன்! ஆபத்தான நிலையில் மனைவி மற்றும் மகள்

Chithra / Aug 21st 2024, 9:11 am
image

Advertisement

 

மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கேகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார்.

மேலும் இரு பெண்களை காயப்படுத்தியதாகவும் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதலவத்த, லெவங்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பணத் தகராறு தொடர்பாக தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் மனைவியின் தாயாரை கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், படுகாயமடைந்த பெண் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மனைவியும் மகளும் கூரிய ஆயுதத்தால் காயம்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலபிடமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பணத்தால் வந்த தகராறு; மாமியாரை கல்லால் அடித்து கொன்ற மருமகன் ஆபத்தான நிலையில் மனைவி மற்றும் மகள்  மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கேகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார்.மேலும் இரு பெண்களை காயப்படுத்தியதாகவும் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதலவத்த, லெவங்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் பணத் தகராறு தொடர்பாக தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் மனைவியின் தாயாரை கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், படுகாயமடைந்த பெண் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மேலும் மனைவியும் மகளும் கூரிய ஆயுதத்தால் காயம்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலபிடமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement