• Sep 11 2025

நடுவீதியில் குடும்பஸ்தர் மீது சரமாரியாக வாள்வெட்டு; யாழின் முக்கிய பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார்

Chithra / Sep 11th 2025, 2:14 pm
image


யாழ்ப்பாணம் - குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பலாலி பொலிசார் தெரிவித்தனர்.

இதில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32  வயதுடைய நபர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் மற்றும் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நடுவீதியில் குடும்பஸ்தர் மீது சரமாரியாக வாள்வெட்டு; யாழின் முக்கிய பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார் யாழ்ப்பாணம் - குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பலாலி பொலிசார் தெரிவித்தனர்.இதில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32  வயதுடைய நபர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் மற்றும் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement