• Dec 09 2024

யானையின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் மரணம்..!

Sharmi / Aug 5th 2024, 2:38 pm
image

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எஹதுவாகம பகுதியில் யானை தாக்கியதில் மேற்படி குடும்பஸ்தர் படுகாயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பகஹவெவ, நொச்சிகம பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது தோட்டத்தை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யானையின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் மரணம். காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எஹதுவாகம பகுதியில் யானை தாக்கியதில் மேற்படி குடும்பஸ்தர் படுகாயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.அம்பகஹவெவ, நொச்சிகம பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தனது தோட்டத்தை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement