மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள், ஆலயத்தில் அலங்காரத்தில் வைக்கப்பட்ட பூக்களைப் பறித்துச் செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி நேற்று (15) மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச் சொரூப பவனியும் திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மடுமாதாவின் திருவிழாவைக் காண நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திரண்டு வருவது வழக்கமாகும்.
அதேபோன்றே இம்முறையும் சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மடுத்திருத்தலத்திற்கு ஆசிபெற திரண்டுள்ளனர்.
ஆலயத்தில் திருப்பலிகள் நிறைவுற்ற பின்னர் பக்தர்கள் பலர், ஆலயத்தை அலங்கரித்துள்ள பூச்செண்டுகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.
ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட பூச்செண்டுகளைப் பறிக்க வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினரால் இரு மொழிகளிலும் அறிவித்தல்கள் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட போதும் அங்கு சென்ற மக்கள் பலர் பூச்செண்டுகளைப் பறித்துச் சென்றமை அந்தப் பகுதியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
குரங்குகள் போல் மலர்களை பறித்துச்சென்ற பக்தர்கள்; மன்.மடு தேவாலயத்தில் இறுதியில் நடந்த சம்பவம் மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள், ஆலயத்தில் அலங்காரத்தில் வைக்கப்பட்ட பூக்களைப் பறித்துச் செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி நேற்று (15) மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச் சொரூப பவனியும் திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.மடுமாதாவின் திருவிழாவைக் காண நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திரண்டு வருவது வழக்கமாகும். அதேபோன்றே இம்முறையும் சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மடுத்திருத்தலத்திற்கு ஆசிபெற திரண்டுள்ளனர். ஆலயத்தில் திருப்பலிகள் நிறைவுற்ற பின்னர் பக்தர்கள் பலர், ஆலயத்தை அலங்கரித்துள்ள பூச்செண்டுகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட பூச்செண்டுகளைப் பறிக்க வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினரால் இரு மொழிகளிலும் அறிவித்தல்கள் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட போதும் அங்கு சென்ற மக்கள் பலர் பூச்செண்டுகளைப் பறித்துச் சென்றமை அந்தப் பகுதியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.