தோப்பூர் பகுதியிலுள்ள திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் வைத்து பம்பரா என்று சொல்லப்படும் குளவி கொட்டுக்கு இலக்காகி 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(01) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த நபர் தோப்பூர் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றி வருபவராவர்.
இவர் நேற்று காலை கடமைக்கும் சென்று கொண்டிருந்தபோது வீதியில் வைத்து குளவி தாக்குதலுக்கு உள்ளானதில் இவ் உயிரிழப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு. தோப்பூர் பகுதியிலுள்ள திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் வைத்து பம்பரா என்று சொல்லப்படும் குளவி கொட்டுக்கு இலக்காகி 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம்(01) காலை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.குறித்த நபர் தோப்பூர் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றி வருபவராவர்.இவர் நேற்று காலை கடமைக்கும் சென்று கொண்டிருந்தபோது வீதியில் வைத்து குளவி தாக்குதலுக்கு உள்ளானதில் இவ் உயிரிழப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவமானது நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.