• May 10 2024

யாழில் மது போதையில் சிறுவர்களுடன் கடலில் சாகசம் செய்த குடும்பஸ்தர்...! கடற்படையினர் எடுத்த நடவடிக்கை...!samugammedia

Sharmi / Jan 29th 2024, 2:45 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம்(27) குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும் , தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார்.

அதன் போது , படகினுள் கடல்நீர் உட்புகுந்ததுடன் , படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்தியுள்ளனர். 

அதனை கடலில் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கண்ணுற்று , அவ்விடத்திற்கு விரைந்து , படகில் இருந்து பிள்ளைகளை மீட்டதுடன் , படகினை கரைக்கு செலுத்துமாறு குடும்பஸ்தருக்கு உத்தரவிட்டனர். 

கரை சேர்ந்த குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்த கடற்படையினர் , இரு பிள்ளைகளையும் கரையில் பாதுகாப்பாக சேர்ந்தனர். 

இதேவேளை படகோட்டிய குடும்பஸ்தர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

யாழில் மது போதையில் சிறுவர்களுடன் கடலில் சாகசம் செய்த குடும்பஸ்தர். கடற்படையினர் எடுத்த நடவடிக்கை.samugammedia யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம்(27) குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும் , தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார். அதன் போது , படகினுள் கடல்நீர் உட்புகுந்ததுடன் , படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்தியுள்ளனர். அதனை கடலில் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கண்ணுற்று , அவ்விடத்திற்கு விரைந்து , படகில் இருந்து பிள்ளைகளை மீட்டதுடன் , படகினை கரைக்கு செலுத்துமாறு குடும்பஸ்தருக்கு உத்தரவிட்டனர். கரை சேர்ந்த குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்த கடற்படையினர் , இரு பிள்ளைகளையும் கரையில் பாதுகாப்பாக சேர்ந்தனர். இதேவேளை படகோட்டிய குடும்பஸ்தர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement