அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
48 வயதுடைய வியட்நாம் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மொரகல்ல கடற்கரையில் வேறொரு குழுவுடன் மகிழ்ச்சியாக நீராடிக் கொண்டிருந்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவரது உடல் பெந்தர கடற்கரையில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டதுடன்,
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மகிழ்ச்சியாக கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்; திடீரென நடந்த துயரம் அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.48 வயதுடைய வியட்நாம் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மொரகல்ல கடற்கரையில் வேறொரு குழுவுடன் மகிழ்ச்சியாக நீராடிக் கொண்டிருந்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.பின்னர் அவரது உடல் பெந்தர கடற்கரையில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.