• Sep 17 2024

முல்லைத்தீவின் எல்லைப்புற கிராமங்களில் மருத்துவ தேவைகளுக்கு உதவ முன்வந்துள்ள பிரான்ஸ் குழு...!

Sharmi / May 11th 2024, 9:33 am
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள மருத்துவ தேவைகளுக்கு உதவுவதற்கு   பிரான்ஸ் நாட்டின்  மாநகராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டின் மாநகராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மருத்துவக் குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று முல்லைத்தீவின் கிராமங்களில் உள்ள மருத்துவ சேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர் 

குறித்த குழுவினர் முல்லைத்தீவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும்  உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இங்கு வருகை தந்ததாகவும்  இங்கு எல்லைப்புற  கிராமங்களில் உள்ள மருத்துவ தேவைகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு இவர்களுக்கான தொடர்ச்சியான உதவிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான அரச தரப்பு பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரோடும் கலந்துரையாடி சில மருத்துவ உதவி பொருட்களை வழங்கி வைத்ததோடு தொடர்ச்சியாக இந்த மக்களுக்கான மருத்துவ தேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த குழுவினர் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக, தங்களுக்கு இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருப்பதாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டே தாங்கள் இங்கு வருகை தந்து ஒரு வார காலம்  முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல்வேறு தரப்பினரை சந்தித்து செல்வதாகவும் தொடர்ந்தும் இந்த மக்களுக்கான உதவிகளை தாங்கள் செய்வதற்கு எண்ணி இருப்பதாகவும் அதை தொடர்ச்சியாக  செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவின் எல்லைப்புற கிராமங்களில் மருத்துவ தேவைகளுக்கு உதவ முன்வந்துள்ள பிரான்ஸ் குழு. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள மருத்துவ தேவைகளுக்கு உதவுவதற்கு   பிரான்ஸ் நாட்டின்  மாநகராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டின் மாநகராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மருத்துவக் குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று முல்லைத்தீவின் கிராமங்களில் உள்ள மருத்துவ சேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர் குறித்த குழுவினர் முல்லைத்தீவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும்  உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இங்கு வருகை தந்ததாகவும்  இங்கு எல்லைப்புற  கிராமங்களில் உள்ள மருத்துவ தேவைகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு இவர்களுக்கான தொடர்ச்சியான உதவிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான அரச தரப்பு பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரோடும் கலந்துரையாடி சில மருத்துவ உதவி பொருட்களை வழங்கி வைத்ததோடு தொடர்ச்சியாக இந்த மக்களுக்கான மருத்துவ தேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த குழுவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தங்களுக்கு இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருப்பதாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டே தாங்கள் இங்கு வருகை தந்து ஒரு வார காலம்  முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல்வேறு தரப்பினரை சந்தித்து செல்வதாகவும் தொடர்ந்தும் இந்த மக்களுக்கான உதவிகளை தாங்கள் செய்வதற்கு எண்ணி இருப்பதாகவும் அதை தொடர்ச்சியாக  செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement