• Dec 03 2024

பாடசாலை மாணவிக்கு அடிக்கடி வந்த கனவு...! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

Sharmi / Mar 26th 2024, 4:00 pm
image

நடிகர் தனுஷ் நடித்துள்ள  3 படத்தினைப் போன்று தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அடிக்கடி கனவு வந்துள்ள நிலையில் குறித்த மாணவி தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது,

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த  பெண்ணொருவர் கணவரை பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகின்றார்.

இவரது மகள் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி கற்று வருகிறார். 

இந்நிலையில், இவரது மகள் கடந்த சனிக்கிழமை  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதன்போது பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மாணவியின் அறையை சோதித்தனர் 

அப்போது,  சமீப காலமாக அடிக்கடி தூக்கிட்டு தற்கொலை செய்வது  போன்று கனவு வருவதால், என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. எனவே 3 படத்தில் வருவதை போல தற்கொலை செய்து கொள்ள போவதாக எழுதியிருந்த கடிதத்தினை பொலிஸார் அவதானித்துள்ளனர். 

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில்  பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவிக்கு அடிக்கடி வந்த கனவு. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம். நடிகர் தனுஷ் நடித்துள்ள  3 படத்தினைப் போன்று தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அடிக்கடி கனவு வந்துள்ள நிலையில் குறித்த மாணவி தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது,சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த  பெண்ணொருவர் கணவரை பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகின்றார்.இவரது மகள் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி கற்று வருகிறார். இந்நிலையில், இவரது மகள் கடந்த சனிக்கிழமை  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன்போது பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மாணவியின் அறையை சோதித்தனர் அப்போது,  சமீப காலமாக அடிக்கடி தூக்கிட்டு தற்கொலை செய்வது  போன்று கனவு வருவதால், என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. எனவே 3 படத்தில் வருவதை போல தற்கொலை செய்து கொள்ள போவதாக எழுதியிருந்த கடிதத்தினை பொலிஸார் அவதானித்துள்ளனர். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில்  பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement