• Nov 07 2025

மகளை ஏற்றிச் செல்ல காத்திருந்த தந்தை மீது தாக்குதல் நடத்திய கும்பல்; திருமலையில் பாடசாலை முன் சம்பவம்

Chithra / Oct 12th 2025, 1:49 pm
image

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து தனது மகளை ஏற்றிச் செல்ல காத்திருந்த தந்தை மீது முச்சக்கர வண்டியில் வந்த சிலர், கடந்த 07ம் திகதி  தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளி இன்று வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலின் பின்னர்,  பாதிக்கப்பட்ட நபர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில்,  பாடசாலை விடுகின்ற நேரங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கருதி, பாடசாலைகளின் முன்பாக பொலிஸாரை கடமையில் நிறுத்துமாறு பெற்றோர் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திருகோணமலை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகளை ஏற்றிச் செல்ல காத்திருந்த தந்தை மீது தாக்குதல் நடத்திய கும்பல்; திருமலையில் பாடசாலை முன் சம்பவம் திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து தனது மகளை ஏற்றிச் செல்ல காத்திருந்த தந்தை மீது முச்சக்கர வண்டியில் வந்த சிலர், கடந்த 07ம் திகதி  தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளி இன்று வெளியாகி உள்ளது.இந்த தாக்குதலின் பின்னர்,  பாதிக்கப்பட்ட நபர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில்,  பாடசாலை விடுகின்ற நேரங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கருதி, பாடசாலைகளின் முன்பாக பொலிஸாரை கடமையில் நிறுத்துமாறு பெற்றோர் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திருகோணமலை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement