• Sep 20 2024

வீட்டு வளவு ஒன்றினுள் புகுந்த ராட்சத முதலை - கடும் சிரமத்துடன் பிடித்த அதிகாரிகள்

Tharun / Apr 5th 2024, 8:22 pm
image

Advertisement

புத்தளம் பகுதியில் இராட்சத முதலையொன்று பிடிக்கப்பட்டு கல்வில சூழலியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


புத்தளம் தேவனுவர பகுதியில் இன்று அதிகாலை இராட்சத முதலையொன்று தனியார் ஒருவரின் வீட்டு வளவு  ஒன்றினுள் புகுந்துள்ளது. 

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.


இதனையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று கடும் பிரயத்தணத்திற்கு மத்தியில் முதலையைப் பிடித்துள்ளனர்.


பின்னர் குறித்த முதலையை கல்வில சூழலியல் பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விடுவித்தனர்.

குறித்த முதலை சுமார் 9 அடி நீளமுடையது எனவும் சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்டு காணப்படுவதாகவும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

வீட்டு வளவு ஒன்றினுள் புகுந்த ராட்சத முதலை - கடும் சிரமத்துடன் பிடித்த அதிகாரிகள் புத்தளம் பகுதியில் இராட்சத முதலையொன்று பிடிக்கப்பட்டு கல்வில சூழலியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, புத்தளம் தேவனுவர பகுதியில் இன்று அதிகாலை இராட்சத முதலையொன்று தனியார் ஒருவரின் வீட்டு வளவு  ஒன்றினுள் புகுந்துள்ளது. இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று கடும் பிரயத்தணத்திற்கு மத்தியில் முதலையைப் பிடித்துள்ளனர்.பின்னர் குறித்த முதலையை கல்வில சூழலியல் பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விடுவித்தனர்.குறித்த முதலை சுமார் 9 அடி நீளமுடையது எனவும் சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்டு காணப்படுவதாகவும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement