• Feb 27 2026

பாதசாரி கடவையில் வேன் மோதி விபத்து; நான்கு நாட்களின் பின் உயிரிழந்த சிறுமி

Chithra / Feb 25th 2026, 7:00 pm
image


அனுராதபுரம் - கெபித்திகொல்லேவ - பதவிய பிரதான வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சிறுமி, நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கதுருவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த  9 வயதுடைய சனுல்லியா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கடந்த 21ஆம் திகதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


இதில் படுகாயமடைந்த சிறுமி பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு  உயிரிழந்துள்ளார். 


அவர் பிரத்திகே வகுப்பொன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற நிலையில் பாதசாரி கடவையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.   


இதன்போது வேன் சாரதி வாகனத்தை அவ்விடத்தில் நிறுத்தாமல்  சென்று பதவிய பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 


பாதசாரி கடவையில் வேன் மோதி விபத்து; நான்கு நாட்களின் பின் உயிரிழந்த சிறுமி அனுராதபுரம் - கெபித்திகொல்லேவ - பதவிய பிரதான வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சிறுமி, நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கதுருவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த  9 வயதுடைய சனுல்லியா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 21ஆம் திகதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் படுகாயமடைந்த சிறுமி பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு  உயிரிழந்துள்ளார். அவர் பிரத்திகே வகுப்பொன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற நிலையில் பாதசாரி கடவையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.   இதன்போது வேன் சாரதி வாகனத்தை அவ்விடத்தில் நிறுத்தாமல்  சென்று பதவிய பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement