• Feb 27 2026

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோருக்கு கொலை மிரட்டல்; சிஐடி விசாரணை

Chithra / Feb 25th 2026, 7:02 pm
image


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அந்த அமைச்சின் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இது குறித்த விபரங்களை வெளியிட்டார்.

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த இரகசியப் புலனாய்வுத் தகவலொன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அமைச்சர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்துப் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அமைச்சர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிகப் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அச்சுறுத்தலின் பின்னணியில் உள்ள நபர்கள் அல்லது குழுக்கள் யார் என்பது தொடர்பில் சி.ஐ.டி.யினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோருக்கு கொலை மிரட்டல்; சிஐடி விசாரணை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அந்த அமைச்சின் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இது குறித்த விபரங்களை வெளியிட்டார்.அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த இரகசியப் புலனாய்வுத் தகவலொன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அமைச்சர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்துப் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அமைச்சர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிகப் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அச்சுறுத்தலின் பின்னணியில் உள்ள நபர்கள் அல்லது குழுக்கள் யார் என்பது தொடர்பில் சி.ஐ.டி.யினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.முக்கிய அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement