• May 04 2025

யாழில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரச அதிபர் நேரடி விஜயம்

Chithra / May 4th 2025, 10:35 am
image

 

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது வியாழக்கிழமை (01) விடுவிக்கப்பட்டதற்கமைய, தெல்லிப்பளை பிரதேசத்திற்கு அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்நேற்று நேரடியாக விஜயம் செய்துளள்ளார்.

அந்த வகையில் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டகப்புலம் புனித அமலோற்பவ மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜே. ஏ. அருள்தாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற பிராத்தனையில் பங்குகொண்டு, அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணியினை பொதுமக்களுடன் சென்று பார்வையிட்டார்.

இதன் போது அப் பிரதேசத்தில்  கண்ணிவெடி தொடர்பான பரிசீலனையில் ஈடுபட்டு வரும் Hallo Trust நிறுவனத்துடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாங்கொல்லை  கிராமத்திற்கு அரச அதிபர் விஜயம் செய்தார்.


யாழில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரச அதிபர் நேரடி விஜயம்  யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது வியாழக்கிழமை (01) விடுவிக்கப்பட்டதற்கமைய, தெல்லிப்பளை பிரதேசத்திற்கு அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்நேற்று நேரடியாக விஜயம் செய்துளள்ளார்.அந்த வகையில் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டகப்புலம் புனித அமலோற்பவ மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜே. ஏ. அருள்தாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற பிராத்தனையில் பங்குகொண்டு, அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.அதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணியினை பொதுமக்களுடன் சென்று பார்வையிட்டார்.இதன் போது அப் பிரதேசத்தில்  கண்ணிவெடி தொடர்பான பரிசீலனையில் ஈடுபட்டு வரும் Hallo Trust நிறுவனத்துடன் கலந்துரையாடினார்.இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாங்கொல்லை  கிராமத்திற்கு அரச அதிபர் விஜயம் செய்தார்.

Advertisement

Advertisement

Advertisement