• Oct 07 2026

மக்களின் பிரச்சினைகளுடன் விளையாடும் அரசு உருவாக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

dorin / Oct 6th 2026, 3:09 pm
image

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறியுள்ள தற்போதைய அரசாங்கம், நாட்டு மக்களை ஏமாற்றி, இனவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைத் தக்கவைக்க முயல்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (06.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் மற்றும் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஹசன் அலால்தீன் ஆகியோர் இக்கருத்துக்களை வெளியிட்டனர்.

ஊடக சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத், ஜனாதிபதி பல்வேறு இடங்களில் உரையாற்றிப் பிரசாரங்களை மேற்கொண்டாலும், இன்று நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மக்களுக்குத் தெரியாமலேயே நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருவதாகச் சாடினார். அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சூரவீரஆரச்சி, உலகப் பொருளாதாரத்தில் இலங்கை 4ஆவது இடத்தில் இருப்பதாகச் சமீபத்தில் கூறியிருந்த கூற்றைச் சுட்டிக்காட்டிய அவர், எந்தப் பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சமன்பிரிய ஹேரத், தற்போதைய பல்கலைக்கழக அமைப்பில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கோ அல்லது கற்பிப்பதற்கோ வழியில்லாத நிலை காணப்படுவதாக மூத்த விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளதை நினைவுகூர்ந்தார்.

 பல்கலைக்கழக அமைப்பில் தற்போது 06 தொகுதி (Batch) மாணவர்கள் தங்கி நிற்கும் முடக்கம் ஏற்பட்டுள்ள போதிலும் அதற்கு அரசாங்கத்திடம் எந்தத் தீர்வும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், நெல்லுக்கு நியாயமான விலை இல்லாமை, மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை, 323 கன்டெய்னர்கள் தொடர்பான பிரச்சினை மற்றும் பெரிய அளவிலான ஹேக்கிங் தாக்குதல் மூலம் நாட்டின் பணம் கொள்ளையடிக்கப்பட்டமை குறித்தும் முறையான விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும், எரிபொருள் விலையேற்றத்தால் பொதுமக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், இவ்வாறான செயற்திறனற்ற அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவது நாட்டின் அனைத்துப் பொதுமக்களினதும் பொறுப்பாகும் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஹசன் அலால்தீன், நாட்டின் முக்கிய பிரச்சினைகளைத் திசைதிருப்பவே அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறினார். கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த இனவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்த ஆட்சியை நடத்தப் பார்ப்பதாகத் தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்கொள்ள முடியாமலும் கடனைச் செலுத்த முடியாமலும் அரசாங்கம் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

 நாட்டின் மொத்தச் சனத்தொகையில் நான்கில் ஒருவர் வறுமையில் வாடுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ள நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், அரசாங்கத்திற்கு எதிரான வலுவான அரசியல் முகாம் தற்போது உருவாகி வருவதாகவும், பிரதான எதிர்க்கட்சியில் சிதறிக் கிடக்கும் அனைத்துத் தரப்பினரையும் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஒன்றுபட்டு இந்த ஆட்சியை வீழ்த்த அணிதிரளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளுடன் விளையாடும் அரசு உருவாக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறியுள்ள தற்போதைய அரசாங்கம், நாட்டு மக்களை ஏமாற்றி, இனவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைத் தக்கவைக்க முயல்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (06.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் மற்றும் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஹசன் அலால்தீன் ஆகியோர் இக்கருத்துக்களை வெளியிட்டனர்.ஊடக சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத், ஜனாதிபதி பல்வேறு இடங்களில் உரையாற்றிப் பிரசாரங்களை மேற்கொண்டாலும், இன்று நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மக்களுக்குத் தெரியாமலேயே நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருவதாகச் சாடினார். அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சூரவீரஆரச்சி, உலகப் பொருளாதாரத்தில் இலங்கை 4ஆவது இடத்தில் இருப்பதாகச் சமீபத்தில் கூறியிருந்த கூற்றைச் சுட்டிக்காட்டிய அவர், எந்தப் பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சமன்பிரிய ஹேரத், தற்போதைய பல்கலைக்கழக அமைப்பில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கோ அல்லது கற்பிப்பதற்கோ வழியில்லாத நிலை காணப்படுவதாக மூத்த விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளதை நினைவுகூர்ந்தார். பல்கலைக்கழக அமைப்பில் தற்போது 06 தொகுதி (Batch) மாணவர்கள் தங்கி நிற்கும் முடக்கம் ஏற்பட்டுள்ள போதிலும் அதற்கு அரசாங்கத்திடம் எந்தத் தீர்வும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், நெல்லுக்கு நியாயமான விலை இல்லாமை, மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை, 323 கன்டெய்னர்கள் தொடர்பான பிரச்சினை மற்றும் பெரிய அளவிலான ஹேக்கிங் தாக்குதல் மூலம் நாட்டின் பணம் கொள்ளையடிக்கப்பட்டமை குறித்தும் முறையான விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும், எரிபொருள் விலையேற்றத்தால் பொதுமக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், இவ்வாறான செயற்திறனற்ற அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவது நாட்டின் அனைத்துப் பொதுமக்களினதும் பொறுப்பாகும் எனக் கூறினார்.இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஹசன் அலால்தீன், நாட்டின் முக்கிய பிரச்சினைகளைத் திசைதிருப்பவே அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறினார். கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த இனவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்த ஆட்சியை நடத்தப் பார்ப்பதாகத் தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்கொள்ள முடியாமலும் கடனைச் செலுத்த முடியாமலும் அரசாங்கம் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார். நாட்டின் மொத்தச் சனத்தொகையில் நான்கில் ஒருவர் வறுமையில் வாடுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ள நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசாங்கத்திற்கு எதிரான வலுவான அரசியல் முகாம் தற்போது உருவாகி வருவதாகவும், பிரதான எதிர்க்கட்சியில் சிதறிக் கிடக்கும் அனைத்துத் தரப்பினரையும் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஒன்றுபட்டு இந்த ஆட்சியை வீழ்த்த அணிதிரளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement