• Oct 02 2026

தம்பதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்; தலைமறைவான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

Chithra / Oct 2nd 2026, 8:02 pm
image


நுவரெலியா - டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நீண்டகாலமாக தலைமறைவாகியிருந்த நிலையில், இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் இருவரை கொலை செய்ததாக பதுளை தெமோதரையைச் சேர்ந்த  37 வயதுடைய மனோஜ் அல்லது மனோஹரன் என அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர், முன்னதாக பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.


அவர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.


இதனையடுத்து, அவர் கண்டி பல்லேகலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.


இந்த நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில்  பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் கடையொன்றுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சந்தேகநபரை இன்று கைது செய்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கிற்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் நடமாடியுள்ளதாகவும், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த மே 21-ஆம் திகதி டிக்கோயா பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் தம்பதியினர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். 


அத்துடன், அவர்களிடமிருந்து சுமார் 18 பவுன் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன. இச்சம்பவம் மலையகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தம்பதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்; தலைமறைவான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது நுவரெலியா - டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நீண்டகாலமாக தலைமறைவாகியிருந்த நிலையில், இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் இருவரை கொலை செய்ததாக பதுளை தெமோதரையைச் சேர்ந்த  37 வயதுடைய மனோஜ் அல்லது மனோஹரன் என அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர், முன்னதாக பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.அவர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.இதனையடுத்து, அவர் கண்டி பல்லேகலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.இந்த நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில்  பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் கடையொன்றுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சந்தேகநபரை இன்று கைது செய்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கிற்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் நடமாடியுள்ளதாகவும், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த மே 21-ஆம் திகதி டிக்கோயா பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் தம்பதியினர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து சுமார் 18 பவுன் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன. இச்சம்பவம் மலையகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement