• Nov 20 2026

மூன்று புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம்!

Chithra / Nov 16th 2026, 5:00 pm
image


இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.


1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 7 (5) ஆம் உப பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.


இதற்கமைய, 2026 ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் மூன்று கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.


1. அப ஜனதா பெரமுன

2. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

3. தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்


இந்த மூன்று கட்சிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, இலங்கையில் தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.


இதனை தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மூன்று புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம் இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 7 (5) ஆம் உப பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.இதற்கமைய, 2026 ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் மூன்று கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.1. அப ஜனதா பெரமுன2. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்3. தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்இந்த மூன்று கட்சிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, இலங்கையில் தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.இதனை தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement