முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை–மனித மோதலைக் கட்டுப்படுத்த, முதற்கட்டமாக மூன்று காட்டு யானைக் கட்டுப்பாட்டு அலகுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடி இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோரிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குச் சுற்றாடல் அமைச்சு அனுப்பிவைத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வேலி அமைக்கப்படும் வரை, கிராமக் குழுக்களை வனசீவராசிகள் அலுவலர்களுடன் இணைத்துச் செயற்படுத்துவதற்கும் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு, கேப்பாபிலவு–புலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு–கோம்பாவில் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்புகளுக்கும் விளைநிலங்களுக்கும் தொடர்ச்சியாக நுழைந்து வருகின்றன. இதனால் வீடுகள், விவசாய விளைபொருட்கள், ஆண்டுக்கணக்கில் வளர்த்தெடுக்கப்பட்ட தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைவதுடன், மக்களின் உயிர்ப்பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ரவிகரன் எம்.பி. சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்விடயம் 2026 செத்தெம்பர் 21 அன்று நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், ஒற்றோபர் 1 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டு, 2027 ஆம் ஆண்டில் யானை வேலி அமைக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
வேலி அமைக்கப்படும் வரை, யானைகளின் வருகை குறித்த முன்னெச்சரிக்கை, அவசரத் தொடர்பு வசதி, வனசீவராசிகள் அலுவலர்களின் விரைவான கள நடவடிக்கை ஆகியவற்றை ஏற்படுத்துமாறு கோரி, ரவிகரன் எம்.பி. 2026 ஒற்றோபர் 14 அன்று சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இவ்விடயத்தைக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்து, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட, பிரதேச நிருவாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறும், தேவையான வளங்கள், பொறுப்பான நிறுவனங்கள், செயற்படுத்தும் காலவரையறை ஆகியவற்றைத் தீர்மானிக்குமாறும் அவர் கேட்டிருந்தார்.
இதனையடுத்து, பாராளுமன்றத்தின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுச் செயலகம் அக்கோரிக்கையைப் பிரேரணை இலக்கம் 779 ஆக 2026 ஒற்றோபர் 23 அன்று சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்தது. உரிய அறிக்கை கிடைத்த பின்னர், அடுத்த குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பிரேரணையைச் சேர்ப்பதற்காகக் குழுத் தவிசாளரின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்படும் எனச் செயலகம் தெரிவித்திருந்தது. அறிக்கையை ரவிகரன் எம்.பிக்கு அனுப்பிவைப்பதுடன், அதன் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலப் பிரதிகளைச் செயலகத்துக்கும் வழங்குமாறு அமைச்சிடம் கேட்டிருந்தது.
இந்நிலையில், 2026 நவெம்பர் 12 அன்று ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்துக்குக் கிடைத்த சுற்றாடல் அமைச்சின் கடிதத்துடன், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிக்கையும் இணைக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கொக்குத்தொடுவாய் மத்தி, கேப்பாபிலவு–புலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு–கோம்பாவில் உள்ளிட்ட பகுதிகளில் மின்வேலிகள் அமைக்கப்படும் வரை, கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்கான இடைக்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்காகத் தகுந்த கிராமக் குழுக்களுக்கு அதிகாரமளித்து, வனசீவராசிகள் அலுவலர்களுடன் இணைந்து செயற்படச் செய்வதன் மூலம் யானைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த முடியும்.
அவ்வாறு அமைக்கப்படும் குழுக்களின் உறுப்பினர்களுக்கு, யானைகளை விரட்டுவதற்கான முறைகள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் வெடிகளின் பயன்பாடு தொடர்பான தொழில்நுட்ப அறிவை வனசீவராசிகள் பாதுகாப்பு அலுவலர்கள் வழங்க முடியும். தேவையான அளவு யானை விரட்டும் வெடிகளையும் அக்குழுக்களுக்கு வழங்க முடியும். யானை–மனித மோதல் அதிகரித்துள்ள கிராமங்களில் பொருத்தமான குழுக்களை அடையாளம் காணுமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அறிவிப்பது பொருத்தமானது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் இப்பிரச்சினையைக் கையாள்வதற்கு வனசீவராசிகள் அலுவலர்களின் பணியுடன் சமூகத்தின் நேரடிப் பங்கேற்பும் அவசியம் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் யானை–மனித மோதலை முகாமைத்துவம் செய்யும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று காட்டு யானைக் கட்டுப்பாட்டு அலகுகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், அதிகாரமளிக்கப்பட்ட கிராமக் குழுக்கள் இவ்வலகுகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலம், உள்ளூர் மட்டத்தில் யானை–மனித மோதலைத் திறம்படக் கையாள முடியும் எனத் திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் காட்டு யானைக் கட்டுப்பாட்டு அலகுகளை அமைக்கத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை–மனித மோதலைக் கட்டுப்படுத்த, முதற்கட்டமாக மூன்று காட்டு யானைக் கட்டுப்பாட்டு அலகுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடி இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோரிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குச் சுற்றாடல் அமைச்சு அனுப்பிவைத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வேலி அமைக்கப்படும் வரை, கிராமக் குழுக்களை வனசீவராசிகள் அலுவலர்களுடன் இணைத்துச் செயற்படுத்துவதற்கும் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு, கேப்பாபிலவு–புலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு–கோம்பாவில் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்புகளுக்கும் விளைநிலங்களுக்கும் தொடர்ச்சியாக நுழைந்து வருகின்றன. இதனால் வீடுகள், விவசாய விளைபொருட்கள், ஆண்டுக்கணக்கில் வளர்த்தெடுக்கப்பட்ட தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைவதுடன், மக்களின் உயிர்ப்பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ரவிகரன் எம்.பி. சுட்டிக்காட்டியிருந்தார்.இவ்விடயம் 2026 செத்தெம்பர் 21 அன்று நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், ஒற்றோபர் 1 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டு, 2027 ஆம் ஆண்டில் யானை வேலி அமைக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.வேலி அமைக்கப்படும் வரை, யானைகளின் வருகை குறித்த முன்னெச்சரிக்கை, அவசரத் தொடர்பு வசதி, வனசீவராசிகள் அலுவலர்களின் விரைவான கள நடவடிக்கை ஆகியவற்றை ஏற்படுத்துமாறு கோரி, ரவிகரன் எம்.பி. 2026 ஒற்றோபர் 14 அன்று சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இவ்விடயத்தைக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்து, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட, பிரதேச நிருவாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறும், தேவையான வளங்கள், பொறுப்பான நிறுவனங்கள், செயற்படுத்தும் காலவரையறை ஆகியவற்றைத் தீர்மானிக்குமாறும் அவர் கேட்டிருந்தார்.இதனையடுத்து, பாராளுமன்றத்தின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுச் செயலகம் அக்கோரிக்கையைப் பிரேரணை இலக்கம் 779 ஆக 2026 ஒற்றோபர் 23 அன்று சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்தது. உரிய அறிக்கை கிடைத்த பின்னர், அடுத்த குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பிரேரணையைச் சேர்ப்பதற்காகக் குழுத் தவிசாளரின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்படும் எனச் செயலகம் தெரிவித்திருந்தது. அறிக்கையை ரவிகரன் எம்.பிக்கு அனுப்பிவைப்பதுடன், அதன் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலப் பிரதிகளைச் செயலகத்துக்கும் வழங்குமாறு அமைச்சிடம் கேட்டிருந்தது.இந்நிலையில், 2026 நவெம்பர் 12 அன்று ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்துக்குக் கிடைத்த சுற்றாடல் அமைச்சின் கடிதத்துடன், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிக்கையும் இணைக்கப்பட்டிருந்தது.குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,கொக்குத்தொடுவாய் மத்தி, கேப்பாபிலவு–புலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு–கோம்பாவில் உள்ளிட்ட பகுதிகளில் மின்வேலிகள் அமைக்கப்படும் வரை, கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்கான இடைக்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்காகத் தகுந்த கிராமக் குழுக்களுக்கு அதிகாரமளித்து, வனசீவராசிகள் அலுவலர்களுடன் இணைந்து செயற்படச் செய்வதன் மூலம் யானைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த முடியும்.அவ்வாறு அமைக்கப்படும் குழுக்களின் உறுப்பினர்களுக்கு, யானைகளை விரட்டுவதற்கான முறைகள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் வெடிகளின் பயன்பாடு தொடர்பான தொழில்நுட்ப அறிவை வனசீவராசிகள் பாதுகாப்பு அலுவலர்கள் வழங்க முடியும். தேவையான அளவு யானை விரட்டும் வெடிகளையும் அக்குழுக்களுக்கு வழங்க முடியும். யானை–மனித மோதல் அதிகரித்துள்ள கிராமங்களில் பொருத்தமான குழுக்களை அடையாளம் காணுமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அறிவிப்பது பொருத்தமானது.முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் இப்பிரச்சினையைக் கையாள்வதற்கு வனசீவராசிகள் அலுவலர்களின் பணியுடன் சமூகத்தின் நேரடிப் பங்கேற்பும் அவசியம் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் யானை–மனித மோதலை முகாமைத்துவம் செய்யும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று காட்டு யானைக் கட்டுப்பாட்டு அலகுகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், அதிகாரமளிக்கப்பட்ட கிராமக் குழுக்கள் இவ்வலகுகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலம், உள்ளூர் மட்டத்தில் யானை–மனித மோதலைத் திறம்படக் கையாள முடியும் எனத் திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.