• Nov 17 2026

திருகோணமலை சிறைச்சாலை தொடர்பில் இம்ரான் எம்.பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி

Aathira / Nov 16th 2026, 6:39 pm
image

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்காக நல்லாட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் பொருத்தமான காணியொன்று இன்மையினால் அந்நிதி திரும்பிச் சென்றது.

 தற்பொழுது கிண்ணியா மட்டக்களப்பு வீதியில் தோணா எனுமிடத்தில் இதற்காக காணியொன்று அடையாளம் காணப்பட்டு நீதி அமைச்சு மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு என்பவற்றிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது காணி இருப்பதனால் 2027ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டு நீதிமன்றத்தினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்றைய (16) பாராளுமன்ற கேள்வி பதிலில் நீதி அமைச்சரிடம் எழுப்பினார். 

திருகோணமலை சிறைச்சாலை அமைந்துள்ள இடமானது நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது, இவ்விடம் சிறைச்சாலைக்கு போதுமானதாக இல்லை, இதன் காரணமாக அங்கு பாரிய இட நெருக்கடி காணப்படுகின்றது, 

கப்பல்துறை பிரதேசத்தில் தேவையான காணி இருப்பதனால் அங்கு அனைத்து வசதிகளுடனும் புதிதாக சிறைச்சாலையொன்றினை அமைப்பது பொருத்தமாகவும், வசதியாகவும் இருக்கும்.

எனவே, எதிர்காலத்தில் தற்போதுள்ள சிறைச்சாலையை கப்பல்துறையில் அனைத்து வசதிகளுடனும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

திருகோணமலை சிறைச்சாலை தொடர்பில் இம்ரான் எம்.பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்காக நல்லாட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் பொருத்தமான காணியொன்று இன்மையினால் அந்நிதி திரும்பிச் சென்றது. தற்பொழுது கிண்ணியா மட்டக்களப்பு வீதியில் தோணா எனுமிடத்தில் இதற்காக காணியொன்று அடையாளம் காணப்பட்டு நீதி அமைச்சு மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு என்பவற்றிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது காணி இருப்பதனால் 2027ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டு நீதிமன்றத்தினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்றைய (16) பாராளுமன்ற கேள்வி பதிலில் நீதி அமைச்சரிடம் எழுப்பினார். திருகோணமலை சிறைச்சாலை அமைந்துள்ள இடமானது நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது, இவ்விடம் சிறைச்சாலைக்கு போதுமானதாக இல்லை, இதன் காரணமாக அங்கு பாரிய இட நெருக்கடி காணப்படுகின்றது, கப்பல்துறை பிரதேசத்தில் தேவையான காணி இருப்பதனால் அங்கு அனைத்து வசதிகளுடனும் புதிதாக சிறைச்சாலையொன்றினை அமைப்பது பொருத்தமாகவும், வசதியாகவும் இருக்கும்.எனவே, எதிர்காலத்தில் தற்போதுள்ள சிறைச்சாலையை கப்பல்துறையில் அனைத்து வசதிகளுடனும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement

Advertisement