இருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனவும், ஏனைய இருவர் பாவனையாளர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நால்வர் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனவும், ஏனைய இருவர் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிண்ணியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, கிண்ணியா பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரிடமிருந்து 2,300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், மஹரூப் நகரைச் சேர்ந்த 29 வயதுடைய நபரிடமிருந்து 2,180 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, கிண்ணியா பைசல் நகர், ரியாத் நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நபரிடமிருந்து 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், மஹரூப் நகரைச் சேர்ந்த 20 வயதுடைய நபரிடமிருந்து 110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் தனிப்பட்ட பாவனைக்காக போதைப்பொருளை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் திங்கட்கிழமை (16) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கிண்ணியாவில் அதிரடி சுற்றிவளைப்பு:ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது இருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனவும், ஏனைய இருவர் பாவனையாளர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நால்வர் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் இருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனவும், ஏனைய இருவர் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிண்ணியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.இதன்போது, கிண்ணியா பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரிடமிருந்து 2,300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், மஹரூப் நகரைச் சேர்ந்த 29 வயதுடைய நபரிடமிருந்து 2,180 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.இவர்கள் இருவரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அதேவேளை, கிண்ணியா பைசல் நகர், ரியாத் நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நபரிடமிருந்து 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், மஹரூப் நகரைச் சேர்ந்த 20 வயதுடைய நபரிடமிருந்து 110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.இவர்கள் இருவரும் தனிப்பட்ட பாவனைக்காக போதைப்பொருளை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நால்வரும் திங்கட்கிழமை (16) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.