• Nov 15 2026

கம்பளை – கண்டி பிரதான வீதியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

Chithra / Nov 15th 2026, 5:00 pm
image


கம்பளை – கண்டி பிரதான வீதியின் வெலிகல்ல பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட நவீன ரக கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


காரைச் செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


விபத்துக்குள்ளான கார் பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் காணப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

கம்பளை – கண்டி பிரதான வீதியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து கம்பளை – கண்டி பிரதான வீதியின் வெலிகல்ல பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட நவீன ரக கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.காரைச் செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.விபத்துக்குள்ளான கார் பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் காணப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement