உயர் கல்விக்காக பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு இதுவரை இருந்த ஒரு முக்கிய செலவுச் சுமை நீக்கப்படவுள்ளது.
கடந்த மே மாதம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொண்ட உத்தியோகபூர்வ பெலாருஸ் விஜயத்தின் பின்னணியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதன்முறையாக பெலாருஸுக்கு உயர்கல்வி கற்கச் செல்லும் இலங்கை மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் நுழைவு விசா கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பெலாருஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டுக்குச் செல்வதற்கான விசா நடைமுறைகளை எளிதாக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானம், பெலாருஸில் உயர்கல்வி கற்கத் திட்டமிடும் இலங்கை மாணவர்களுக்கும், அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணமாக அமையும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய சலுகை உயர் கல்விக்காக பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு இதுவரை இருந்த ஒரு முக்கிய செலவுச் சுமை நீக்கப்படவுள்ளது.கடந்த மே மாதம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொண்ட உத்தியோகபூர்வ பெலாருஸ் விஜயத்தின் பின்னணியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, முதன்முறையாக பெலாருஸுக்கு உயர்கல்வி கற்கச் செல்லும் இலங்கை மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் நுழைவு விசா கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அத்துடன், பெலாருஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டுக்குச் செல்வதற்கான விசா நடைமுறைகளை எளிதாக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்தத் தீர்மானம், பெலாருஸில் உயர்கல்வி கற்கத் திட்டமிடும் இலங்கை மாணவர்களுக்கும், அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணமாக அமையும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.