யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரையில் பொலிஸாரின் முழுமையான பங்களிப்புடன் இன்று விழாவொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு இன்னும் ஓரிரு வாரத்துக்குள் தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பொலிஸாரை பயன்படுத்தி தையிட்டியில் இவ்வாறான நிகழ்வு இடம்பெறுவதாக தையிட்டி காணி உரிமையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சட்டவிரோதத் திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸார் விழாவை முன்னின்று ஏற்பாடு செய்கின்றனமை விசனங்களை உருவாக்கியுள்ளது.
திஸ்ஸ விகாரையில் இடம்பெறும் முன்னெடுப்புக்களை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் சென்று அண்மையில் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது விகாரையை மேலும் விஸ்தரிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தின் பொய்களை வெளிப்படுத்துவதற்கே இப் போராட்டத்தை மேற்கொள்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தையிட்டியில் பொலிஸாரின் பங்களிப்புடன் மாபெரும் விழா; எதிர்ப்பு தெரிவித்து வெடித்தது போராட்டம் யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரையில் பொலிஸாரின் முழுமையான பங்களிப்புடன் இன்று விழாவொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு இன்னும் ஓரிரு வாரத்துக்குள் தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.இந்நிலையில் பொலிஸாரை பயன்படுத்தி தையிட்டியில் இவ்வாறான நிகழ்வு இடம்பெறுவதாக தையிட்டி காணி உரிமையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சட்டவிரோதத் திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸார் விழாவை முன்னின்று ஏற்பாடு செய்கின்றனமை விசனங்களை உருவாக்கியுள்ளது.திஸ்ஸ விகாரையில் இடம்பெறும் முன்னெடுப்புக்களை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் சென்று அண்மையில் பார்வையிட்டுள்ளனர். இதன்போது விகாரையை மேலும் விஸ்தரிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் பொய்களை வெளிப்படுத்துவதற்கே இப் போராட்டத்தை மேற்கொள்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.