• Nov 07 2025

நடிகை சிம்ரன் தலைமையில் இலங்கையில் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா!

Chithra / Oct 7th 2025, 4:57 pm
image

இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா இலங்கையில்  இடம்பெற்றது.

கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியத் திரையுலக நட்சத்திரம் சிம்ரன் கலந்து கொண்டார். 

நிகழ்வின் முதல் அம்சமாக மணப்பெண் அலங்கார போட்டி இடம்பெற்றது.

இதன் நடுவர்களாக அழகுக்கலை நிபுணர்களான பாத்திமா சஹானியா உவைஸ், சமீஹா, சிவதர்ஷனி ஆகியோர் செயற்பட்டனர். க்ரோடிவ் சொலுசன் அமைப்பு இந்த நிகழ்வுகளை நெறிப்படுத்தி இருந்தது.

இதன்போது கண்கவர் நடன நிகழ்ச்சியினை வத்தளை சுடர் மூவ்ஸ் நடன கலைஞர்களான ராஜசேகரம் சுவாதி, தர்ஷிகா பரமேஸ்வரன், ராஜசிங்கம் துமேஸ் ப்ரியா ஆகியோர் வழங்கியிருந்தனர். 

அதேநேரம், பிரபல தென்னிந்திய தமிழ் நட்சத்திரம் சிம்ரனினால் பட்டமளிப்பு நிகழ்வு நடத்தி வைக்கப்பட்டது. இதன்போது, விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.


நடிகை சிம்ரன் தலைமையில் இலங்கையில் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா இலங்கையில்  இடம்பெற்றது.கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியத் திரையுலக நட்சத்திரம் சிம்ரன் கலந்து கொண்டார். நிகழ்வின் முதல் அம்சமாக மணப்பெண் அலங்கார போட்டி இடம்பெற்றது.இதன் நடுவர்களாக அழகுக்கலை நிபுணர்களான பாத்திமா சஹானியா உவைஸ், சமீஹா, சிவதர்ஷனி ஆகியோர் செயற்பட்டனர். க்ரோடிவ் சொலுசன் அமைப்பு இந்த நிகழ்வுகளை நெறிப்படுத்தி இருந்தது.இதன்போது கண்கவர் நடன நிகழ்ச்சியினை வத்தளை சுடர் மூவ்ஸ் நடன கலைஞர்களான ராஜசேகரம் சுவாதி, தர்ஷிகா பரமேஸ்வரன், ராஜசிங்கம் துமேஸ் ப்ரியா ஆகியோர் வழங்கியிருந்தனர். அதேநேரம், பிரபல தென்னிந்திய தமிழ் நட்சத்திரம் சிம்ரனினால் பட்டமளிப்பு நிகழ்வு நடத்தி வைக்கப்பட்டது. இதன்போது, விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement