முருதவெல நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வரல்ல - மொரவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆசிரியர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசிரியர் தனது நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா சென்றுள்ள நிலையில்,
முருதவெல நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுடன் சுற்றுலா சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி முருதவெல நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் வரல்ல - மொரவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆசிரியர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.ஆசிரியர் தனது நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா சென்றுள்ள நிலையில்,முருதவெல நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.