• May 01 2026

யாழில் கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

shanu / May 1st 2026, 10:14 pm
image

இன்றையதினம் யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.


அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

யாழில் கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு இன்றையதினம் யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement