ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடத்தப்பட்ட தேர்தலில், விளாடிமிர் புடின் 87.97% வாக்குகள் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் அதிபராக புடின் 5-ஆவது முறையாகப் பதவியேற்கவுள்ளாா்.
இதன்மூலம் ஏற்கனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷ்யாவில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.
அந்நாட்டு அதிபா் புடினுக்கு எதிராகவோ, உக்ரைன் மீதான அவரின் போா் தொடா்பாகவோ பொதுவெளியில் விமா்சிக்க அனுமதிக்கப்படாமல், மிகுந்த கட்டுப்பாடான சூழலில் தோ்தல் நடைபெற்றது.
புதினை தீவிரமாக எதிா்த்து வந்த முக்கிய எதிா்க் கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, கடந்த மாதம் அந்நாட்டு சிறையில் உயிரிழந்தாா்.
இதேபோல புடினின் பிற எதிா்ப்பாளா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். அல்லது நாடு கடத்தப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது .
இதனால் பிரதான எதிா்க்கட்சிகளோ, எதிா்ப்பாளா்களோ தோ்தல் போட்டியில் இல்லாத சூழலில், நேரடியாகவும் இணையவழியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
ரஷ்யாவின் 16 நகரங்களில் 65-க்கும் மேற்பட்டவா்கள் ஞாயிற்றுக்கிழமை வன்முறைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஓவிடி-இன்ஃபோ என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
வாக்குச்சாவடிகளில் அத்துமீறலில் ஈடுபட்டு வாக்குப் பதிவைச் சீா்குலைக்க முயற்சித்தவா்கள் தேசத் துரோக குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட வேண்டும் என்று புதின் தலைமையிலான ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவா் டிமித்ரி மெத்வதேவ் தெரிவித்தாா்.
அதேவேளை உக்ரனுடனான போர் மற்றும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் விளாடிமிர் புடின் மீண்டும் அதிபர் தேர்தலில் 87.97% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இது எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் வரலாற்றுச் சாதனை. மீண்டும் ரஷ்ய அதிபரானார் விளாடிமிர் புடின். ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடத்தப்பட்ட தேர்தலில், விளாடிமிர் புடின் 87.97% வாக்குகள் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் ரஷ்யாவின் அதிபராக புடின் 5-ஆவது முறையாகப் பதவியேற்கவுள்ளாா்.இதன்மூலம் ஏற்கனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா்.கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷ்யாவில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்நாட்டு அதிபா் புடினுக்கு எதிராகவோ, உக்ரைன் மீதான அவரின் போா் தொடா்பாகவோ பொதுவெளியில் விமா்சிக்க அனுமதிக்கப்படாமல், மிகுந்த கட்டுப்பாடான சூழலில் தோ்தல் நடைபெற்றது. புதினை தீவிரமாக எதிா்த்து வந்த முக்கிய எதிா்க் கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, கடந்த மாதம் அந்நாட்டு சிறையில் உயிரிழந்தாா்.இதேபோல புடினின் பிற எதிா்ப்பாளா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். அல்லது நாடு கடத்தப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் பிரதான எதிா்க்கட்சிகளோ, எதிா்ப்பாளா்களோ தோ்தல் போட்டியில் இல்லாத சூழலில், நேரடியாகவும் இணையவழியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. ரஷ்யாவின் 16 நகரங்களில் 65-க்கும் மேற்பட்டவா்கள் ஞாயிற்றுக்கிழமை வன்முறைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஓவிடி-இன்ஃபோ என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடிகளில் அத்துமீறலில் ஈடுபட்டு வாக்குப் பதிவைச் சீா்குலைக்க முயற்சித்தவா்கள் தேசத் துரோக குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட வேண்டும் என்று புதின் தலைமையிலான ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவா் டிமித்ரி மெத்வதேவ் தெரிவித்தாா்.அதேவேளை உக்ரனுடனான போர் மற்றும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் விளாடிமிர் புடின் மீண்டும் அதிபர் தேர்தலில் 87.97% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இது எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.