கண்டியில் அக்குறணை, தொடங்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத் தீ பரவல் இன்று அதிகாலை 04.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலின் போது வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்குறணையில் அதிகாலையில் பற்றியெரிந்த வீடு; 5 பேர் வைத்தியசாலையில் கண்டியில் அக்குறணை, தொடங்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இத் தீ பரவல் இன்று அதிகாலை 04.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ பரவலின் போது வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.