நுவரெலியா மாவட்டம், திம்புலபத்தனை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.
ஹட்டன் - கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று (21) பிற்பகல் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
வீட்டின் பின்புறம் இருந்த பெரிய மண்மேடு திடீரென சரிந்து வீட்டின் மீது விழுந்ததில், வீட்டின் ஒரு படுக்கையறை முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மண்மேடு இடிந்து விழுந்ததால் வீட்டின் ஏனைய சுவர்களும் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதனால், அந்த வீட்டில் வசித்த 05 பேர் தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. எனினும், வீட்டு உபகரணங்கள் மற்றும் உடமைகள் சேதமடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் சேத விபரங்களைச் சேகரித்து வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திம்புலபத்தனையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடொன்று பலத்த சேதம் நுவரெலியா மாவட்டம், திம்புலபத்தனை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.ஹட்டன் - கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று (21) பிற்பகல் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.வீட்டின் பின்புறம் இருந்த பெரிய மண்மேடு திடீரென சரிந்து வீட்டின் மீது விழுந்ததில், வீட்டின் ஒரு படுக்கையறை முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மண்மேடு இடிந்து விழுந்ததால் வீட்டின் ஏனைய சுவர்களும் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதனால், அந்த வீட்டில் வசித்த 05 பேர் தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. எனினும், வீட்டு உபகரணங்கள் மற்றும் உடமைகள் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் சேத விபரங்களைச் சேகரித்து வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.