• Jun 16 2024

மஸ்கெலியாவில் வீதியில் சரிந்த பாரிய மரம்...! போக்குவரத்து பாதிப்பு...!

Sharmi / May 23rd 2024, 7:18 pm
image

Advertisement

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் மல்லியப்பூ தோட்ட பகுதியில் பாரிய மரம் ஒன்று சாய்ந்ததால் சாமிமலை மஸ்கெலியா, காட்மோர் மஸ்கெலியா வீதி சுமார் மூன்று மணித்தியாலம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்கள் மற்றும் மல்லியப்பூ தோட்ட தொழிலாளர்கள்  இணைந்து  சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் இன்று மதியம் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும், இப் பகுதியில் இடைஇடையே கடும் காற்று இடை இடையே கனத்த மழை பெய்தது வருகிறது.

இந்நிலையில் நீரேந்துப் பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்  பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஸ்கெலியாவில் வீதியில் சரிந்த பாரிய மரம். போக்குவரத்து பாதிப்பு. மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் மல்லியப்பூ தோட்ட பகுதியில் பாரிய மரம் ஒன்று சாய்ந்ததால் சாமிமலை மஸ்கெலியா, காட்மோர் மஸ்கெலியா வீதி சுமார் மூன்று மணித்தியாலம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்கள் மற்றும் மல்லியப்பூ தோட்ட தொழிலாளர்கள்  இணைந்து  சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர்.அதனைத் தொடர்ந்து மீண்டும் இன்று மதியம் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது.மேலும், இப் பகுதியில் இடைஇடையே கடும் காற்று இடை இடையே கனத்த மழை பெய்தது வருகிறது.இந்நிலையில் நீரேந்துப் பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்  பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement