• Jun 16 2024

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தன்சல் நிகழ்வு...!

Sharmi / May 23rd 2024, 7:10 pm
image

Advertisement

பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் தானம் வழங்கும் நிகழ்வு இன்று(23) முன்னெடுக்கப்பட்டது.

வன்னி பிரதி பாெலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரதி பாெலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக சவ்வரசி கஞ்சி தானம் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன் பாேது வீதியால் சென்ற பலரும் வாகனங்களை நிறுத்தி சவ்வரசி கஞ்சி தானத்தை பெற்றுச் சென்றிருந்தனர். 

இதேவேளை, வவுனியா தலைமை பாெலிஸ் நிலையத்தில் சமுதாய பாெலிஸ் குழுவின் ஏற்பாட்டில் இரண்டாயிரம் பேருக்கு சமைத்த உணவுப் பாெதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன்பாேது வீதியால் சென்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்று சமைத்த உணவுப் பாெதிகளை பெற்றுச் சென்றனர். 

இந் நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பிரதி பாெலிஸ்மா அதிபர் சாமந்த விஜய சேகர, சிரேஸ்ட பாெலிஸ் அத்தியட்சகர் மாலன் அஜந்த பெரேரா, வவுனியா தலமை பாெலிஸ் நிலைய பாெறுப்பதிகாரி ஜெயக்காெடி, மதகுருமா, சமுதாய பாெலிஸ் குழு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து காெண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தன்சல் நிகழ்வு. பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் தானம் வழங்கும் நிகழ்வு இன்று(23) முன்னெடுக்கப்பட்டது.வன்னி பிரதி பாெலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரதி பாெலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக சவ்வரசி கஞ்சி தானம் வழங்கி வைக்கப்பட்டது. இதன் பாேது வீதியால் சென்ற பலரும் வாகனங்களை நிறுத்தி சவ்வரசி கஞ்சி தானத்தை பெற்றுச் சென்றிருந்தனர். இதேவேளை, வவுனியா தலைமை பாெலிஸ் நிலையத்தில் சமுதாய பாெலிஸ் குழுவின் ஏற்பாட்டில் இரண்டாயிரம் பேருக்கு சமைத்த உணவுப் பாெதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்பாேது வீதியால் சென்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்று சமைத்த உணவுப் பாெதிகளை பெற்றுச் சென்றனர். இந் நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பிரதி பாெலிஸ்மா அதிபர் சாமந்த விஜய சேகர, சிரேஸ்ட பாெலிஸ் அத்தியட்சகர் மாலன் அஜந்த பெரேரா, வவுனியா தலமை பாெலிஸ் நிலைய பாெறுப்பதிகாரி ஜெயக்காெடி, மதகுருமா, சமுதாய பாெலிஸ் குழு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து காெண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement