• Jun 16 2024

தையிட்டி விகாரைக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்!

Anaath / May 23rd 2024, 6:43 pm
image

Advertisement

சட்டவிரோதமாக  தையிட்டியில் அமைக்கப்பட்ட  திஸ்ஸ விகாரைக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தியவாறு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விகாரையானது தமிழ் மக்களது காணிகளை அபகரித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து  குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கபட்டது.








இதன்போது அடக்கு முறைகளுக்கு அடங்கவே மாட்டோம், ஆயுதங்களுக்கு அடிபணிய மாட்டோம், இந்த மண் எங்களின் சொந்த மண், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், சட்ட விரோத விகாரையை உடனே அகற்று, மற்றும் சட்ட விரோத விகாரைக்கு காவல் துறை  என பலவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தையிட்டி விகாரைக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் சட்டவிரோதமாக  தையிட்டியில் அமைக்கப்பட்ட  திஸ்ஸ விகாரைக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தியவாறு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விகாரையானது தமிழ் மக்களது காணிகளை அபகரித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து  குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கபட்டது.இதன்போது அடக்கு முறைகளுக்கு அடங்கவே மாட்டோம், ஆயுதங்களுக்கு அடிபணிய மாட்டோம், இந்த மண் எங்களின் சொந்த மண், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், சட்ட விரோத விகாரையை உடனே அகற்று, மற்றும் சட்ட விரோத விகாரைக்கு காவல் துறை  என பலவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement