• Feb 07 2026

வினாடிக்கு 10 மீட்டர் வேகத்தில் ஓடும் மனித உருவ ரோபோ!

dileesiya / Feb 5th 2026, 5:53 pm
image


சீன ரோபாட்டிக்ஸ் துறையில் புதிய மைல்கல்லாக, உலகின் அதிவேக மனித உருவ (Humanoid) ரோபோவாகக் கூறப்படும் ‘போல்ட்’ (Bolt) ரோபோவை MirrorMe Technology நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.


நிஜ உலக சோதனைகளின் போது, இந்த முழு அளவிலான மனித உருவ ரோபோ வினாடிக்கு 10 மீட்டர் என்ற உச்ச வேகத்தை எட்டியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.


ஆய்வகத்திற்கு வெளியே இவ்வளவு வேகத்தை எட்டிய முதல் மனித உருவ ரோபோ என்பதே இதன் சிறப்பம்சமாகும்.


175 சென்டிமீட்டர் உயரமும், 75 கிலோகிராம் எடையும் கொண்ட போல்ட், மனிதனைப் போன்ற விகிதாச்சாரத்தையும், செயல்திறன் சார்ந்த பொறியியலையும் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.


புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு (Joint) வடிவமைப்புகள் மற்றும் முழுமையாக மேம்படுத்தப்பட்ட சக்தி அமைப்பு (Power System) மூலம், அதீத ஓடும் வேகத்தையும் இயற்கையான மனித இயக்கத்தையும் ஒரே நேரத்தில் பேணக்கூடிய வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.


உலகின் வேகமான ரோபோவை உருவாக்குவது மட்டுமே தங்களின் இலக்கு அல்ல என MirrorMe Technology தெரிவித்துள்ளது.


மாறாக, மனிதர்களின் தடகள திறன்களை அணுகவோ அல்லது அதையும் மிஞ்சவோ கூடிய “சூப்பர்-ஸ்பீசீஸ்” ரோபோக்களை உருவாக்குவதே தங்களின் நீண்டகால நோக்கம் என நிறுவனம் விளக்குகிறது


வினாடிக்கு 10 மீட்டர் வேகத்தில் ஓடும் மனித உருவ ரோபோ சீன ரோபாட்டிக்ஸ் துறையில் புதிய மைல்கல்லாக, உலகின் அதிவேக மனித உருவ (Humanoid) ரோபோவாகக் கூறப்படும் ‘போல்ட்’ (Bolt) ரோபோவை MirrorMe Technology நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.நிஜ உலக சோதனைகளின் போது, இந்த முழு அளவிலான மனித உருவ ரோபோ வினாடிக்கு 10 மீட்டர் என்ற உச்ச வேகத்தை எட்டியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.ஆய்வகத்திற்கு வெளியே இவ்வளவு வேகத்தை எட்டிய முதல் மனித உருவ ரோபோ என்பதே இதன் சிறப்பம்சமாகும்.175 சென்டிமீட்டர் உயரமும், 75 கிலோகிராம் எடையும் கொண்ட போல்ட், மனிதனைப் போன்ற விகிதாச்சாரத்தையும், செயல்திறன் சார்ந்த பொறியியலையும் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு (Joint) வடிவமைப்புகள் மற்றும் முழுமையாக மேம்படுத்தப்பட்ட சக்தி அமைப்பு (Power System) மூலம், அதீத ஓடும் வேகத்தையும் இயற்கையான மனித இயக்கத்தையும் ஒரே நேரத்தில் பேணக்கூடிய வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.உலகின் வேகமான ரோபோவை உருவாக்குவது மட்டுமே தங்களின் இலக்கு அல்ல என MirrorMe Technology தெரிவித்துள்ளது.மாறாக, மனிதர்களின் தடகள திறன்களை அணுகவோ அல்லது அதையும் மிஞ்சவோ கூடிய “சூப்பர்-ஸ்பீசீஸ்” ரோபோக்களை உருவாக்குவதே தங்களின் நீண்டகால நோக்கம் என நிறுவனம் விளக்குகிறது

Advertisement

Advertisement

Advertisement