காணி உரிமைப்பத்திரம் ஒரு வெற்றுக் காகிதமல்ல. என்னால் செய்ய முடிந்ததை ஏன் இந்த அரசாங்கத்தால் செய்ய முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பு 3 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு முன்னாள் இருந்த அரசாங்கங்களில் கூட வீடுகள் கையளிக்கப்பட்டன. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. நான் அமைச்சரவையில் இருந்த போதும் வீடுகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால் தற்போதைய பெருந்தோட்ட நிறுவனங்கள் காணிப் பத்திரங்களை கையகப்படுத்தி வைத்திருப்பதால் இடம் இருந்தும் நிதி இருந்தும்
பாத்ரூம் கூட கட்ட முடியவில்லை. நான் அமைச்சரவையில் இருந்த ஒரு வருடத்தில் என்னால் செய்ய முடிந்தததை ஏற் இந்த அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை.
பாராளுமன்றில் ஆவணத்தைக் கையளிக்க தயார். எந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் இதற்கு ஆதரவாக கையெழுத்திடுகின்றனர் என்பதைப் பார்ப்போம்.- என்றார்.
காணி உரிமைப் பத்திரம் வெற்றுக் காகிதமல்ல - என்னால் செய்ய முடிந்ததை ஏன் அரசாங்கத்தால் செய்ய முடியாது - ஜீவன் கேள்வி காணி உரிமைப்பத்திரம் ஒரு வெற்றுக் காகிதமல்ல. என்னால் செய்ய முடிந்ததை ஏன் இந்த அரசாங்கத்தால் செய்ய முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பு 3 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமக்கு முன்னாள் இருந்த அரசாங்கங்களில் கூட வீடுகள் கையளிக்கப்பட்டன. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. நான் அமைச்சரவையில் இருந்த போதும் வீடுகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போதைய பெருந்தோட்ட நிறுவனங்கள் காணிப் பத்திரங்களை கையகப்படுத்தி வைத்திருப்பதால் இடம் இருந்தும் நிதி இருந்தும் பாத்ரூம் கூட கட்ட முடியவில்லை. நான் அமைச்சரவையில் இருந்த ஒரு வருடத்தில் என்னால் செய்ய முடிந்தததை ஏற் இந்த அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை. பாராளுமன்றில் ஆவணத்தைக் கையளிக்க தயார். எந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் இதற்கு ஆதரவாக கையெழுத்திடுகின்றனர் என்பதைப் பார்ப்போம்.- என்றார்.