• Nov 08 2024

சம்மாந்துறையில் குடியிருப்பு பகுதிகளை தாக்கிய தனியன் யானை..!

Sharmi / Oct 9th 2024, 9:15 am
image

அம்பாறையில் தனியன் யானை ஒன்று திடீரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(09) காலை இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 - குவாசி நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள வீதியில் தனியன் யானை ஒன்று வீட்டு காணிகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 தினங்களாக தனியன் யானை ஒன்று  சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்ற பகுதிகளில் அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பபட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




சம்மாந்துறையில் குடியிருப்பு பகுதிகளை தாக்கிய தனியன் யானை. அம்பாறையில் தனியன் யானை ஒன்று திடீரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் இன்று(09) காலை இடம்பெற்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 - குவாசி நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள வீதியில் தனியன் யானை ஒன்று வீட்டு காணிகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2 தினங்களாக தனியன் யானை ஒன்று  சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்ற பகுதிகளில் அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பபட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement