வெலிப்பன்னை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்கம மத்துகம வீதியில் லேவன்துவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று(29) மாலை இடம்பெற்றுள்ளது.
மத்துகமையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது படுகாயமடைந்த பெண், வேத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை , பதுரலிய பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிப்பன்னை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியில் பயணித்த பெண்ணை மோதித்தள்ளிய லொறி. பரிதாபமாக பறிபோன உயிர். வெலிப்பன்னை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்கம மத்துகம வீதியில் லேவன்துவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து நேற்று(29) மாலை இடம்பெற்றுள்ளது.மத்துகமையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தின் போது படுகாயமடைந்த பெண், வேத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.களுத்துறை , பதுரலிய பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிப்பன்னை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.