• Sep 20 2024

தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்- ஒரே நாளில் லாட்டரி மூலம் ரூ.16 கோடி பரிசுதொகை வென்ற சம்பவம்! SamugamMedia

Tamil nila / Mar 17th 2023, 10:42 am
image

Advertisement

அதிர்ஷ்டம் என்பது பலருக்கு கிடைத்துவிடாது. கிடைக்கும் நேரம் வந்தால் யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது. பணம் கூரையைப் பொய்த்துக்கொண்டு கொட்டிவிடும். இதுபோன்று தான் கடந்த 3 தலைமுறைகளாக ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸைச் சேர்ந்த தம்பதிகள் எப்பொழுதாவது அதிர்ஷ்டம் கிடைத்து கஷ்டம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எப்போதுமே லாட்டரி விழுந்ததில்லை என்று கூறப்படுகிறது. இருந்தப்போதும் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குவதை மட்டும் அவர்கள் ஒருபோதும் நிறுத்தியதில்லை.


இந்த சூழலில் ஒரு முறை மட்டும் வாங்க மறுத்துள்ளனர். இதனால் மனைவி கோபமடைந்ததை அறிந்த கணவர், எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக இருமுறை எப்போதும் தன்னுடைய மனைவி வாங்கும் அதே எண்ணை வாங்கியுள்ளார் அந்த நபர். தனக்கு மற்றும் மனைவிக்கு என இரு எண்களை வாங்கிய நிலையில், எப்போதும் போல லாட்டரி விழுந்துவிடுமா? என்ற எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர்.


ஆஸ்திரேலியா தம்பதியினர் வாங்கிய இரண்டு லாட்டரியில் இருந்து ரூ. 16 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. இந்த ஜாக்பார்டை வென்ற தம்பதியினருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியை அடைந்துள்ளனர். இதுக்குறித்து பேசிய ஆஸ்திரேலியா தம்பதியினர், வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் வெற்றி பெற்று எங்களின் கனவை நினைவாக்குவோம் என்று நினைத்தோம். அது இப்போது நிறைவேறிவிட்டது என்றும், 30 ஆண்டுகளாக ஒரே எண்ணில் தான் நாங்கள் பந்தயத்தைக் கட்டி வந்தோம் அதற்கு இப்போதுதான் வெற்றி கிடைத்துள்ளது என மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்துள்னர்.


மேலும் தங்களின் பரிசை தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதாக நம்புவதாக தம்பதியினர் தெரிவித்தனர். மேலும் இந்த பணத்தை வைத்து எனது மகளுக்கு வீடு வாங்க விருப்பதாகவும், பேரன், பேத்திகளின் எதிர்காலத் தேவைகளுக்கு உபயோகிக்கவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே இரவில் ஏழ்மையின் நிலையில் இருந்தவர்கள் கோடீஸ்வரராக மாறியிருப்பது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இதே போன்று தான் சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு லாட்டரியில் ரூபாய் 55 லட்சம் கிடைத்துள்ளது. இந்த செய்திக் குறித்து பல முறை அப்பெண்ணைத் தொடர்பு கொள்ள இந்நிறுவனத்தினர் முயற்சித்த போதும், போலியாக இருக்கும் என்றும், ஆன்லைன் மோசடியாக இருக்கலாம்? என நினைத்து பரிசுப்பொருளை வாங்க மறுத்துள்ளார். பின்னர் தகவல் உண்மை என அறிந்ததும் பரிசுத்தொகையைப் பெற்றுக்கொண்ட சம்பவமும் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.



தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்- ஒரே நாளில் லாட்டரி மூலம் ரூ.16 கோடி பரிசுதொகை வென்ற சம்பவம் SamugamMedia அதிர்ஷ்டம் என்பது பலருக்கு கிடைத்துவிடாது. கிடைக்கும் நேரம் வந்தால் யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது. பணம் கூரையைப் பொய்த்துக்கொண்டு கொட்டிவிடும். இதுபோன்று தான் கடந்த 3 தலைமுறைகளாக ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸைச் சேர்ந்த தம்பதிகள் எப்பொழுதாவது அதிர்ஷ்டம் கிடைத்து கஷ்டம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எப்போதுமே லாட்டரி விழுந்ததில்லை என்று கூறப்படுகிறது. இருந்தப்போதும் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குவதை மட்டும் அவர்கள் ஒருபோதும் நிறுத்தியதில்லை.இந்த சூழலில் ஒரு முறை மட்டும் வாங்க மறுத்துள்ளனர். இதனால் மனைவி கோபமடைந்ததை அறிந்த கணவர், எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக இருமுறை எப்போதும் தன்னுடைய மனைவி வாங்கும் அதே எண்ணை வாங்கியுள்ளார் அந்த நபர். தனக்கு மற்றும் மனைவிக்கு என இரு எண்களை வாங்கிய நிலையில், எப்போதும் போல லாட்டரி விழுந்துவிடுமா என்ற எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர்.ஆஸ்திரேலியா தம்பதியினர் வாங்கிய இரண்டு லாட்டரியில் இருந்து ரூ. 16 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. இந்த ஜாக்பார்டை வென்ற தம்பதியினருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியை அடைந்துள்ளனர். இதுக்குறித்து பேசிய ஆஸ்திரேலியா தம்பதியினர், வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் வெற்றி பெற்று எங்களின் கனவை நினைவாக்குவோம் என்று நினைத்தோம். அது இப்போது நிறைவேறிவிட்டது என்றும், 30 ஆண்டுகளாக ஒரே எண்ணில் தான் நாங்கள் பந்தயத்தைக் கட்டி வந்தோம் அதற்கு இப்போதுதான் வெற்றி கிடைத்துள்ளது என மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்துள்னர்.மேலும் தங்களின் பரிசை தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதாக நம்புவதாக தம்பதியினர் தெரிவித்தனர். மேலும் இந்த பணத்தை வைத்து எனது மகளுக்கு வீடு வாங்க விருப்பதாகவும், பேரன், பேத்திகளின் எதிர்காலத் தேவைகளுக்கு உபயோகிக்கவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே இரவில் ஏழ்மையின் நிலையில் இருந்தவர்கள் கோடீஸ்வரராக மாறியிருப்பது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதே போன்று தான் சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு லாட்டரியில் ரூபாய் 55 லட்சம் கிடைத்துள்ளது. இந்த செய்திக் குறித்து பல முறை அப்பெண்ணைத் தொடர்பு கொள்ள இந்நிறுவனத்தினர் முயற்சித்த போதும், போலியாக இருக்கும் என்றும், ஆன்லைன் மோசடியாக இருக்கலாம் என நினைத்து பரிசுப்பொருளை வாங்க மறுத்துள்ளார். பின்னர் தகவல் உண்மை என அறிந்ததும் பரிசுத்தொகையைப் பெற்றுக்கொண்ட சம்பவமும் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement