• Dec 17 2025

தனிப்பட்ட தகராறில் கொடூரமாக கொல்லப்பட்ட நபர் ; சந்தேகநபரின் வீட்டுக்கு தீ வைத்த 50 பேர் கொண்ட கும்பல்

Chithra / Dec 17th 2025, 9:08 am
image


களுத்துறை, மத்துகம பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்றிரவு ஒருவர் வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.


மத்துகம, மேல் வோகன்வத்தை பகுதியை சேர்ந்த 41 வயது நபரே நேற்றிரவு 11.40 மணியளவில் கொலை செய்யப்பட்டார்.


கொலையைச் செய்த 36 வயதான நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.


இந்நிலையில் சந்தேகபரின் வீட்டுக்கு இன்று காலை சென்ற 50இற்கும் மேற்பட்ட நபர்கள்  தீ வைத்துள்ளதாக தெரியவருகிறது.


சந்தேக நபரின் வீடு தொடங்கொட பகுதியில் அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேக நபரை கைது செய்ய மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தனிப்பட்ட தகராறில் கொடூரமாக கொல்லப்பட்ட நபர் ; சந்தேகநபரின் வீட்டுக்கு தீ வைத்த 50 பேர் கொண்ட கும்பல் களுத்துறை, மத்துகம பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்றிரவு ஒருவர் வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.மத்துகம, மேல் வோகன்வத்தை பகுதியை சேர்ந்த 41 வயது நபரே நேற்றிரவு 11.40 மணியளவில் கொலை செய்யப்பட்டார்.கொலையைச் செய்த 36 வயதான நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.இந்நிலையில் சந்தேகபரின் வீட்டுக்கு இன்று காலை சென்ற 50இற்கும் மேற்பட்ட நபர்கள்  தீ வைத்துள்ளதாக தெரியவருகிறது.சந்தேக நபரின் வீடு தொடங்கொட பகுதியில் அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபரை கைது செய்ய மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement