• May 01 2026

கோர விபத்தில் தம்பதிகள் உயிரிழப்பு; மேலும் மூவர் காயம்- தென்னிலங்கையில் சோகம்!

shanu / Dec 16th 2025, 10:26 pm
image

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.


கார் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 45 வயதுடைய நபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 39 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


மேற்படி இருவரும் தம்பதியர் என்று பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.  


காரின் பின் ஆசனங்களில் அமர்ந்து பயணித்த மேற்படி தம்பதியரின் உறவினர்கள் மூவர் (ஆண் ஒருவர், இரு பெண்கள்) காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கோர விபத்தில் தம்பதிகள் உயிரிழப்பு; மேலும் மூவர் காயம்- தென்னிலங்கையில் சோகம் கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.கார் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 45 வயதுடைய நபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 39 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.மேற்படி இருவரும் தம்பதியர் என்று பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.  காரின் பின் ஆசனங்களில் அமர்ந்து பயணித்த மேற்படி தம்பதியரின் உறவினர்கள் மூவர் (ஆண் ஒருவர், இரு பெண்கள்) காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement