• Jan 29 2025

மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அமைச்சுப் பதவி அவசியமில்லை! - நாமல் கருணாரத்ன எம்.பி தெரிவிப்பு

Chithra / Nov 21st 2024, 11:55 am
image

 

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிறைவேற்றுவதே எமது நோக்கம் எனவும்  அமைச்சுப் பதவி அவசியமில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து தான் வேலை செய்யவில்லை எனவும், அவ்வாறான எதிர்ப்பார்ப்பு என்றும் எனக்கு இருந்ததில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்  கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வாக்களித்த அனைத்து மக்களுக்கும் மதிப்பளிப்பதாகவும் நன்றி தெரிவிப்பதாகவும் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு சிறிதளவேனும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டடோமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அமைச்சுப் பதவி அவசியமில்லை - நாமல் கருணாரத்ன எம்.பி தெரிவிப்பு  மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிறைவேற்றுவதே எமது நோக்கம் எனவும்  அமைச்சுப் பதவி அவசியமில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து தான் வேலை செய்யவில்லை எனவும், அவ்வாறான எதிர்ப்பார்ப்பு என்றும் எனக்கு இருந்ததில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்  கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.வாக்களித்த அனைத்து மக்களுக்கும் மதிப்பளிப்பதாகவும் நன்றி தெரிவிப்பதாகவும் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு சிறிதளவேனும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டடோமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement