• Jan 28 2025

யாழில் புதிதாக அமைக்கப்படவுள்ள - மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

Tharmini / Nov 21st 2024, 11:50 am
image

புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்,

யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் நேற்று (20) ,

மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள மீன்பிடி வான் திருத்துதல் தொடர்பான,

விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.

மேலும், இது தொடர்பான உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும்  அதற்கான நிதியைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல் தொடர்பாகவும் அரச அதிபரால் உரிய தரப்புக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர்  (காணி) க.ஸ்ரீமோகனன்,

தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கடற்றொழி்ல் திணைக்கள உதவிப் பணிப்பாளர்,

கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப்  பொறியியலாளர்,

மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், தெல்லிப்பளை மற்றும் சங்கானை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள்,

யு.என்.டி.பி. நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் துறைசாா் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


யாழில் புதிதாக அமைக்கப்படவுள்ள - மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்,யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் நேற்று (20) ,மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள மீன்பிடி வான் திருத்துதல் தொடர்பான, விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.மேலும், இது தொடர்பான உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும்  அதற்கான நிதியைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல் தொடர்பாகவும் அரச அதிபரால் உரிய தரப்புக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர்  (காணி) க.ஸ்ரீமோகனன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கடற்றொழி்ல் திணைக்கள உதவிப் பணிப்பாளர்,கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப்  பொறியியலாளர், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், தெல்லிப்பளை மற்றும் சங்கானை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், யு.என்.டி.பி. நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் துறைசாா் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement