• Apr 13 2026

யாழில் திடீரென மாயமான ஆணுறை வழங்கும் இயந்திரம்...!நடந்தது என்ன? samugammedia

Ziya / Dec 19th 2023, 12:17 pm
image

யாழில் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த ஆணுறை வழங்கும் இயந்திரம்  காணமல் போயுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றில் வளாகத்தின்பொருத்தப்பட்டிருந்த ஆணுறை வழங்கும் இயந்திரம் காணமல் போயுள்ளதாக மருத்துவமனைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அண்மைக் காலங்களாக எய்ட்ஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்கள் ஊடாக ஆணுறைகளை வழங்கும் திட்டம் அண்மையில் நாடளாவிய ரீதியாகத் தொடங்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறைப் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றின் வளாகத்தில் வெளி நோயாளர்களுடன் வருபவர்கள் தங்கியிருப்பதற்காக அமைக்கப்படுள்ள கொட்டகைப் பகுதியிலும் தானியங்கி ஆணுறை இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு பொருத்தப்பட்டிருந்த தானியங்கி ஆணுறை இயந்திரமே சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் திடீரென மாயமான ஆணுறை வழங்கும் இயந்திரம்.நடந்தது என்ன samugammedia யாழில் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த ஆணுறை வழங்கும் இயந்திரம்  காணமல் போயுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றில் வளாகத்தின்பொருத்தப்பட்டிருந்த ஆணுறை வழங்கும் இயந்திரம் காணமல் போயுள்ளதாக மருத்துவமனைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையில் அண்மைக் காலங்களாக எய்ட்ஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்கள் ஊடாக ஆணுறைகளை வழங்கும் திட்டம் அண்மையில் நாடளாவிய ரீதியாகத் தொடங்கப்பட்டிருந்தது.அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறைப் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றின் வளாகத்தில் வெளி நோயாளர்களுடன் வருபவர்கள் தங்கியிருப்பதற்காக அமைக்கப்படுள்ள கொட்டகைப் பகுதியிலும் தானியங்கி ஆணுறை இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.இவ்வாறு பொருத்தப்பட்டிருந்த தானியங்கி ஆணுறை இயந்திரமே சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement