• Apr 03 2025

பிரபல அமைச்சரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்...! மாயமான வைர நகைகள்...! samugammedia

Sharmi / Jan 8th 2024, 11:18 am
image

சுற்றுலாத்துறை அமைச்சரான ஹரின் பெர்னாண்டோவின் வீட்டிற்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்  கடந்த 3ஆம் திகதி  மைச்சரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 மைச்சரின் வீட்டுக்குள் பிரவேசித்த சந்தேகநபர், வீட்டில் இருந்த நகை, வைரம், இரத்தினக்கல் மோதிரங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபா என தெரியவந்துள்ளது.

அதிகாலை 1 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் பிரதேசவாசிகள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபரின் மனைவி மற்றும் மகளை பேலியகொட ஒலியமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்றையதினம் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



பிரபல அமைச்சரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர். மாயமான வைர நகைகள். samugammedia சுற்றுலாத்துறை அமைச்சரான ஹரின் பெர்னாண்டோவின் வீட்டிற்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர்  கடந்த 3ஆம் திகதி  அமைச்சரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அமைச்சரின் வீட்டுக்குள் பிரவேசித்த சந்தேகநபர், வீட்டில் இருந்த நகை, வைரம், இரத்தினக்கல் மோதிரங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபா என தெரியவந்துள்ளது.அதிகாலை 1 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் பிரதேசவாசிகள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபரின் மனைவி மற்றும் மகளை பேலியகொட ஒலியமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது கைது செய்துள்ளனர்.சந்தேக நபர்கள் இன்றையதினம் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement