• Nov 25 2024

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நேபாள மாணவி பலி - இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது !

Anaath / Aug 31st 2024, 11:02 am
image

அமெரிக்காவில்  நேபாள நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர்  கொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் முனா பாண்டே (வயது 21). நேபாள நாட்டை சேர்ந்த இவர் கல்லூரியில் படித்து வந்து இருக்கிறார்.

இந்நிலையில், அந்த மாணவி துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு குண்டு காயங்களால் குடியிருப்பில் கிடந்துள்ளார். இதுபற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தபோது, மாணவி முனா உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, சம்பவ பகுதியில் இருந்து பாபி சின்ஹா ஷா (வயது 52) என்பவர் தப்பி சென்றது தெரிய வந்தது. அவரை போக்குவரத்து நிறுத்தத்தில் வைத்து பொலிஸா  கைது செய்து உள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நேபாள மாணவி பலி - இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது அமெரிக்காவில்  நேபாள நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர்  கொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் முனா பாண்டே (வயது 21). நேபாள நாட்டை சேர்ந்த இவர் கல்லூரியில் படித்து வந்து இருக்கிறார்.இந்நிலையில், அந்த மாணவி துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு குண்டு காயங்களால் குடியிருப்பில் கிடந்துள்ளார். இதுபற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தபோது, மாணவி முனா உயிரிழந்து விட்டார்.இதுபற்றி சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, சம்பவ பகுதியில் இருந்து பாபி சின்ஹா ஷா (வயது 52) என்பவர் தப்பி சென்றது தெரிய வந்தது. அவரை போக்குவரத்து நிறுத்தத்தில் வைத்து பொலிஸா  கைது செய்து உள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement