• Dec 06 2024

யாழில் குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..!

Sharmi / Aug 31st 2024, 11:30 am
image

முதன்முறையாக யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு  நேற்றைய தினம் பாடசாலையின் அதிபர் ஜனாப் N.ஷாபி தலைமையில் நடை பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் மாவட்ட செயலாளரும் , யாழ் மாவட்ட  சாரணர் ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சின்னத்தை சூட்டி வைத்தார்.

அத்துடன் சிறப்பு விருந்தினராக உதவிச் சாரணர் ஆணையாளர் திருமதி.P அருள்சந்திரன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், அயற் பாடசாலை சாரணர்கள், பொறுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,  பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




யாழில் குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு. முதன்முறையாக யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு  நேற்றைய தினம் பாடசாலையின் அதிபர் ஜனாப் N.ஷாபி தலைமையில் நடை பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் மாவட்ட செயலாளரும் , யாழ் மாவட்ட  சாரணர் ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சின்னத்தை சூட்டி வைத்தார்.அத்துடன் சிறப்பு விருந்தினராக உதவிச் சாரணர் ஆணையாளர் திருமதி.P அருள்சந்திரன் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், அயற் பாடசாலை சாரணர்கள், பொறுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,  பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement