• Dec 09 2024

331 பட்டதாரிகள் சிறைச்சாலையில்- பேராசிரியர் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

Sharmi / Aug 31st 2024, 11:40 am
image

நாட்டிலுள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இவர்களில் 66 பேர் சிறை தண்டணை விதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், 256 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் சிறைச்சாலையில் 185,056 கைதிகள் இருந்துள்ள நிலையில், அவர்களில் 14,952 பேர் உயர்தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் எனவும் தெரிவித்தார்.

இது தவிர, சாதாரண தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களில் 44,614 பேரும், எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 64,684 பேரும், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 34,673 பேரும், 1-5 தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 20,188 பேரும் சிறைச்சாலையில் உள்ளனர்.

இதேவேளை, பாடசாலைகளுக்கு செல்லாத 5,370 கைதிகள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

331 பட்டதாரிகள் சிறைச்சாலையில்- பேராசிரியர் வெளியிட்ட பரபரப்பு தகவல். நாட்டிலுள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.இவர்களில் 66 பேர் சிறை தண்டணை விதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், 256 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் சிறைச்சாலையில் 185,056 கைதிகள் இருந்துள்ள நிலையில், அவர்களில் 14,952 பேர் உயர்தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் எனவும் தெரிவித்தார்.இது தவிர, சாதாரண தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களில் 44,614 பேரும், எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 64,684 பேரும், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 34,673 பேரும், 1-5 தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 20,188 பேரும் சிறைச்சாலையில் உள்ளனர்.இதேவேளை, பாடசாலைகளுக்கு செல்லாத 5,370 கைதிகள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement