• Jun 24 2024

தேர்தலில் புதிய கூட்டணி? - விரைவில் மக்கள் சந்திப்புக்களுக்கு ஏற்பாடு! மஹிந்த அதிரடி அறிவிப்பபு

Chithra / Jun 16th 2024, 1:27 pm
image

Advertisement

 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றிருக்காவிடின் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தியிருக்க முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீண்டு வருகிறது. 

எமது அரசியல் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துவருகின்றோம்.

மாவட்ட ரீதியில் மாபெரும் மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றோம். 

அண்மையில் அம்பாந்தோட்டை பகுதியில் மக்கள் சந்திப்பொன்றை ஏற்பாடு  செய்திருந்தோம்.

அம்பாறை, பதுளை, புத்தளம், குருணாகல் போன்ற மாவட்டங்களில் விரைவில்  மக்கள் சந்திப்புக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை வீழ்ச்சிப்பாதைக்கு  கொண்டு சென்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வீழ்ச்சியடைந்திருக்காவிட்டால்  கட்சிசார்பாக  ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்தியிருப்போம்.

எதிர்வரும் தேர்தலில்  எவருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கவில்லை. கட்சி ரீதியாகவே தீர்மானம் மேற்கொள்வோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தொிவித்துள்ளாா்.

தேர்தலில் புதிய கூட்டணி - விரைவில் மக்கள் சந்திப்புக்களுக்கு ஏற்பாடு மஹிந்த அதிரடி அறிவிப்பபு  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றிருக்காவிடின் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தியிருக்க முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீண்டு வருகிறது. எமது அரசியல் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துவருகின்றோம்.மாவட்ட ரீதியில் மாபெரும் மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றோம். அண்மையில் அம்பாந்தோட்டை பகுதியில் மக்கள் சந்திப்பொன்றை ஏற்பாடு  செய்திருந்தோம்.அம்பாறை, பதுளை, புத்தளம், குருணாகல் போன்ற மாவட்டங்களில் விரைவில்  மக்கள் சந்திப்புக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை வீழ்ச்சிப்பாதைக்கு  கொண்டு சென்றார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வீழ்ச்சியடைந்திருக்காவிட்டால்  கட்சிசார்பாக  ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்தியிருப்போம்.எதிர்வரும் தேர்தலில்  எவருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கவில்லை. கட்சி ரீதியாகவே தீர்மானம் மேற்கொள்வோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தொிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

Advertisement