• Apr 03 2025

பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்

Chithra / Jun 16th 2024, 1:38 pm
image

 

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கூட்டமானது, இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கடசியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், 

தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராசா உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்  தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.குறித்த கூட்டமானது, இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது.இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கடசியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராசா உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement