• Sep 11 2025

15 கடுமையான குற்றங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்த புதிய விசாரணை பிரிவு

Chithra / Sep 10th 2025, 2:14 pm
image

 

புதிதாக நிறுவப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், நிதிக் குற்றங்கள் மற்றும் சட்ட விதிகள் மீறப்பட்டமை தொடர்பான 15 கடுமையான சம்பவங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் பிற சட்ட அமுலாக்க அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் அண்மையில் நிறுவப்பட்டது.

விரைவான , விசேட கவனம் தேவைப்படும் சிக்கலான மற்றும் உணர்திறன் வாய்ந்த வழக்குகளைக் கையாள்வது இந்த பணியகத்தின் நோக்கமாகும்.

தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமுள்ள பல வழக்கு கோப்புகள் மற்றும் முறைப்பாடுகள் புதிய பிரிவுக்கு மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 கடுமையான குற்றங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்த புதிய விசாரணை பிரிவு  புதிதாக நிறுவப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், நிதிக் குற்றங்கள் மற்றும் சட்ட விதிகள் மீறப்பட்டமை தொடர்பான 15 கடுமையான சம்பவங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.பொதுமக்கள் மற்றும் பிற சட்ட அமுலாக்க அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் அண்மையில் நிறுவப்பட்டது.விரைவான , விசேட கவனம் தேவைப்படும் சிக்கலான மற்றும் உணர்திறன் வாய்ந்த வழக்குகளைக் கையாள்வது இந்த பணியகத்தின் நோக்கமாகும்.தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமுள்ள பல வழக்கு கோப்புகள் மற்றும் முறைப்பாடுகள் புதிய பிரிவுக்கு மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement