• Nov 21 2025

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! பலத்த காற்று, மின்னல், மழை தொடரும் வாய்ப்பு

Chithra / Nov 19th 2025, 7:42 am
image

நாட்டை அண்மித்து காணப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாட்டைவிட்டு விலகிச் செல்வதால், நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமொன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

இதற்கமைய குறித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து, இலங்கையின் வடக்குக் கடற்பிராந்தியத்தை அண்மித்து பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


இந்நிலையில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில்  வடகிழக்குத்  திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான காணப்படும்.


ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலத்த காற்று, மின்னல், மழை தொடரும் வாய்ப்பு நாட்டை அண்மித்து காணப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாட்டைவிட்டு விலகிச் செல்வதால், நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமொன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய குறித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து, இலங்கையின் வடக்குக் கடற்பிராந்தியத்தை அண்மித்து பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில்  வடகிழக்குத்  திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான காணப்படும்.ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement